TN School Students Special Offer
பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு சலுகை
தமிழகத்தில் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், அனைத்து பள்ளிகளும் ஜூன் 12 ஆம் தேதி முதல் திறக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் பள்ளி மாணவர்கள் பயணம் செய்வதற்கு வசதியாக அரசு பேருந்துகளில் சீருடை வரும் மாணவ மாணவிகள் இலவசமாக பயணம் செய்யலாம் என அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
TN School Students Special Offer அரசு பேருந்துகளை போல, தனியார் பேருந்துகளும் மக்களின் தேவை அறிந்து பல்வேறு சலுகைகளை வழங்கி அரசுக்கே முன்னுதாரமான திகழ்கிறது. அதாவது, பேருந்துகளில் டிக்கெட் எடுக்க சில்லறை தேவை என்ற சிரமத்தை தீர்ப்பதற்காக, கோவையில் உள்ள சில தனியார் பேருந்துகள் டிக்கெட் எடுப்பதை UPI எனப்படும் டிஜிட்டல் முறைக்கு மாற்றி அமைத்துள்ளது. இத்தகைய வசதியை அரசு பேருந்துகளில் கொண்டு வருவதற்கான நடவடிக்கையும் விரைவில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் தனியார் பேருந்து நிறுவனம் ஒன்று சலுகை ஒன்றை வழங்கி இருக்கிறது.
அதாவது, கோவை மாவட்டத்தில் தனியார் பேருந்து நிறுவனம் சார்பில் இயங்கி வரும் 4 பேருந்துகளிலும் பள்ளி மாணவ மாணவிகள் சீருடை உடன் வந்தால், அவர்களுக்கு ரூ. 5 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பேருந்து நிறுவனத்தின் இந்த அறிவிப்பு பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW
Click here | |
Telegram | Click here |