TN Schools Accessories Details
‘கோடை வெயில் கொளுத்துவதால் தமிழகம் முழுவதும் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்’ என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த கல்வி ஆண்டுக்கான இறுதி வேலை நாட்கள் ஏப்ரல் 30ம் தேதியுடன் முடிந்தது. அதனால் மே 1ம் தேதி முதல் கோடைவிடுமுறை அறிவிக்கப்பட்டது.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
இதையடுத்து, 2023-24ம் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறப்பதற்கான நாட்கள் குறித்த விவரங்களை இம்மாத தொடக்கத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து இருந்தார். அதன்படி 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஜூன் 1ம் தேதியும், தொடக்க கல்வியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை ஜூன் 5ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

கல்வி உபகரணங்கள்
தமிழக பள்ளி மாணவர்களின் நலனுக்காக தமிழக அரசு பல நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது.இந்நிலையில் மாணவர்களுக்காக முதலமைச்சர் ஸ்டாலின் கல்வி உபகரணங்களை இலவசமாக வழங்க உள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த இவர் ” பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்களுக்கு பள்ளி புத்தகங்கள் உடனடியாக கிடைக்க தமிழக அரசு பல ஏற்பாடுகளை செய்துள்ளது.
மேலும் பள்ளிகள் திறந்து ஒரு வாரத்திலேயே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்படும். இது மட்டுமல்லாமல் தமிழக முதல்வர் இந்த ஆண்டு முதல் மாணவர்களுக்கு 11 பொருட்கள் அடங்கிய கல்வி உபகரணங்கள் இலவசமாக வழங்க உள்ளதாகவும், இதற்கான இந்த திட்டம் அடுத்த மாதம் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.