TNPSC Group 2 Result Delay Reason
TNPSC Group 2 Result Delay Reason: குரூப் 2 தேர்வு மே மாதம் நடைபெற்றது. ஆண்டுகால தேர்வு அட்டவணையின் படி ,செப்டம்பர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்க வேண்டும். இந்நிலையில், தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகளில் மகளிருக்கான 30% இட ஒதுக்கீடு வழங்கும் முறையை மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
ஏற்கனவே, பெண்களுக்கான இடஒதுக்கீட்டில் நடைமுறையில் இருந்த செங்குத்து நகர்வுக்கு (Vertical Reservation) பதிலாக கிடைமட்ட நகர்வு முறை பின்பற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தது. இந்த புதிய நடைமுறையின் படி, மகளிருக்கு முதலில் 30% இட ஒதுக்கீடு வழங்கி விட்டு, மீதமுள்ள இடங்களில் போட்டியிட அனுமதி மறுக்கப்படும்.
இந்த, கிடைமட்ட இடஒதுக்கீடு (Horizontal Reservation) முறையை நடைமுறைப்படுத்தும் துவக்க நடவடிக்கையாக ஏற்கனவே வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் பணியாளர் தேர்வாணையம் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. இந்த முன்மாதிரி ஆய்வின் அடிப்படையில், மென்பொருள் ஒன்றையும் தேர்வாணையயும் உருவாக்கம் செய்துள்ளது.
எனவே, இந்த புதிய முறையின் அடிப்படையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட இருப்பதால், கூடுதல் கால அவகாசம் ஆவதாக டிஎன்பிஎஸ்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

TNPSC Group 2 Result Delay Reason
குரூப் 2 விடைத்தாள்கள் தண்ணீரில் நனைத்ததா?
குரூப் 2 தேர்வின் விடைத்தாள்கள் தண்ணீரில் நனைத்தது மற்றும் மென்பொருள் பாதிப்பு காரணமாக தேர்வு முடிவுகள் வெளியிட தாமதம் என செய்திகள் வெளியாகின. அவைகள் TNPSC மூலமாக வெளியாகாத அடிப்படை முகாந்திரம் இல்லாத செய்திகள் எனவே தேர்வர்கள் வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை
குரூப் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகலாம் என்று தகவல்கள் கிடைத்துள்ளது.
இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW
Click here | |
Telegram | Click here |