pongal parisu 2023
pongal parisu 2023 தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை அனைவரும் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்புடன் பணம் வழங்கப்பட்டு வந்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த பொங்கலுக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் பணத்திற்கு பதில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பை முழு கரும்புடன் வழங்கப்பட்டது. இதில் உருண்டை வெல்லம் வழங்கியதில் பல இடங்களில் தரமான வெல்லம் வழங்கப்படாததால் புகார்கள் எழுந்தன. எதிர்க்கட்சிகள் இதை கடுமையாக விமர்சனம் செய்தன.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
இதனால் வருகிற பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்குவதற்கு பதில் பணம் ரூ.1000 வழங்கி விடலாமா? என்று அரசு ஆலோசித்து வருகிறது.
பொங்கல் பரிசு – Pongal Parisu 2023
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பல்வேறு வகையான மளிகை பொருட்கள் மற்றும் முழு கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து வர இருக்கும் பொங்கல் பண்டிகைக்கான பொங்கல் பரிசு குறித்து கடந்த 19ம் தேதி அன்று தமிழக முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.
இதில் இலவச வேட்டி, சேலையின் நிறம் மற்றும் டிசைன்களை மாற்ற இருப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த முறை பரிசு தொகுப்பில் மளிகை பொருட்கள் எடை குறைவானதாகவும், தரமற்றதாகவும் இருப்பதாக புகார்கள் பெறப்பட்டதால் இந்த பரிசு தொகுப்பிற்கு பதிலாக ரொக்க பரிசாக ரூ.1000 வழங்கப்படும் எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தொகை அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக முறைகேடுகள் நடைபெறாமல் உரிய நபருக்கு ரொக்கப்பரிசு கிடைக்கும். மேலும் தற்போது தமிழகம் முழுவதும் 2.20 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இதில் 14.60 லட்சம் பேர் வங்கி கணக்கு தொடங்கவில்லை. அதனால் 14.60 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு வாரத்திற்குள் கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்க வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.